ஜனாதிபதி சட்டத்தரணியான ஹெமான்த்த வர்னகுலசூரிய உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தனியார் வைத்தயசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று திடீரென காலமானார்.
இவர் தனது 74ஆவது வயதில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹேமந்த வர்ணகுலசூரிய நாட்டின் மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஆவார்.
இத்தாலி, கிரீஸ் மற்றும் அல்பானியா ஆகியவற்றிற்கான இலங்கை தூதராகவும், மால்டா மற்றும் சைப்ரஸிற்கும் உயர் ஆணையாளராகவும் ஹெமான்த்த வர்னகுலசூரிய பணியாற்றியுள்ளார்.
மேலும், சட்டவாட்சி மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாக்க அரும்பாடுபட்ட ஒருவராவார்.