மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலத்தை நீடித்தார் ஜனாதிபதி

Report Print Shalini in சமூகம்
73Shares

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அவர், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதியுடன் ஓய்வுபெற இருந்தார்.

இந்த நிலையில் இவரது பதவிக்காலத்தை 2019 ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.