ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்: அடையாளம் காட்டிய உறவினர்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்
194Shares

நோர்வூட் - கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென்.ஜோன்டிலரி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நோர்வூட் ரொக்வூட் மேற்பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான கிருபாகரன் சசிரேக்கா (வயது 30) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் செய்திகள் வெளிவந்திருந்தன. இதனையடுத்த குறித்த பெண்ணின் உறவினர்கள் நோர்வூட் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

இதேவேளை, பிரேத பரிசோதனைகளின் பின் குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.