யாழ்ப்பாண வீதியில் கோர விபத்து - பெண் உட்பட இருவர் பலி - இருவர் ஆபத்தான நிலையில்

Report Print Vethu Vethu in சமூகம்
2278Shares

யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏ9 பிரதான வீதியின் புளியங்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கொள்கலன் வாகனத்தின் சாரதியான ஜயமுஹமுதலிகே தொன் உஜித் தேஷாந்த மற்றும் கிளிநொச்சி, செல்வநகர் பிரதேசத்தை சேர்ந்த கிங்ஸ்லி, அருளையா சரோஜினி தேவி என்ற பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கொள்கலன் மற்றும் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வேனும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டமையினால் இந்த விபத்து நிகழந்துள்ளது.

இரண்டு வாகனங்களும் அதிக வேகமாக பயணித்துள்ள நிலையில், சாரதிகளினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.