இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் வீடொன்றிலிருந்து கிடைத்த பொருள்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - குச்சவெளி, வல்வக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றை இன்று அதிகாலை சோதனைக்குட்படுத்திய போது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 2.250 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் 40 வயது மதிக்கத்தக்க 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகபர்களும் குச்சவெளி பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.