வவுனியா - ஈரட்டை பெரியகுளம் அலகல்ல பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈரட்டை பெரியகுளம் அலகல்ல பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து இன்று காலை இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.
வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே இதனை அண்டிய பகுதிகளில் இருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈரட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.