இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது

Report Print Navoj in சமூகம்
42Shares

வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் வெவ்வேறு பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரை நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான குழுவினர் சந்தேக நபர்கள் இருவருடன், இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா மற்றும் ஹேரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2700 மில்லி கிராம் ஹேரோயின் மற்றும் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா என்பன வியாபார நடவடிக்கைக்கு கொண்டு சென்ற போது வாழைச்சேனை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சந்தேக நபர்களை பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.