திருகோணமலை நகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 184 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையாக டெங்கு தொடர்பான விபரம் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.
உவர்மலை, சிவபுரி, ஜின்னா நகர், சோனக தெரு, கல்லூரி வீதி போன்ற பகுதிகளில் டெங்கு தொற்று அதிகமாக காணப்படுகின்றது.
திருகோணமலை அரசடியைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவரே டெங்கு நோய்க்கு பலியாகியுள்ளார்.
இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார திணைக்களம், திருகோணமலை நகராட்சி மன்றம் மற்றும் கிராமங்களின் சமூக மட்ட அமைப்புக்கள் என்பன வீடு வீடாக சென்று டெங்கு தொடர்பான சோதனைகளை நடாத்தி டெங்கு பெருகக் கூடிய இடங்களை கண்ட பிடித்து அழித்து வருகின்றனர்.
மேலும் சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக கிராமப்புர பகுதிகளிலும் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக மூதூர், தம்பலகாமம், குச்சவெளி போன்ற பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.