கொழும்பில் முறையான வாகன தாரிப்பிடங்களுக்கான வசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் 67 இலட்சத்து 95ஆயிரத்து 469 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2017ஆம் ஆண்டில் 72 இலட்சத்து 47ஆயிரத்து 122 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்புக்கு நாளாந்தம் சுமார் 5 இலட்சம் வாகங்கள் போக்குவரத்து செய்கின்ற நிலையில், அவற்றுக்கு உரிய தரிப்பிட வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்நிலையில் வீதி வாகன தப்பிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுடன்,வாகன தர்ப்பிடங்களுக்கான உரிய முகாமைத்துவம் அவசியம் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.