மல்லாவிப் பொதுச்சந்தையில் மூடப்பட்டுக் கிடக்கும் வர்த்தக நிலையங்கள்

Report Print Yathu in சமூகம்
46Shares

முல்லைத்தீவு மல்லாவிப் பொதுச்சந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற வர்த்தக நிலையங்கள் தற்போது வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக துணுக்காய் பிரதேச சபை செயலாளர் கே.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்குட்பட்ட மல்லாவிப் பொதுச்சந்தை வளாகத்தில் கடந்த 2013ம் ஆண்டு நெல்சீப் திட்டத்தின் கீழ் 194 லட்சத்து 55 ஆயிரத்து 518 ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தையின் நவீன கடைத்தொகுதி இதுவரை வழங்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

குறித்த கடைகளை வழங்குமாறு தொடர்ச்சியாக வர்த்தகர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இருந்தபோதும், இதுவரை அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்புக்களும் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

முன்னர் இச்சந்தை வளாகத்தில் கடைகளை நடாத்திய வர்த்தகர்களுக்கு இந்தக் கடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இரு மாடிகளைக கொண்ட இக்கட்டடத்தொகுதியில் கீழ் தளத்தில் உள்ள எட்டுக்கடைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய கடைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.