மன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கிய இராட்சத டொல்பின்

Report Print Ashik in சமூகம்

தனுஸ்கோடிக்கு அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் இராட்சத டொல்பின் ஒன்று கரையொதுங்கி உள்ளது.

தனுஷ்கோடிக்கு அருகே முகுந்த ராயர் சத்திரம் கடல் பகுதியில் அரியவகை கூன் முதுகு ஓன்கி இனத்தைச் சேர்ந்த டொல்பின் மீன் ஒன்று கண் பகுதியில் காயம் அடைந்து இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கரை ஒதுங்கிய டொல்பினை கால் நடை மருத்துவர் மூலம் உடற்கூற்று பரிசோதனை செய்த பின் மணலில் புதைத்தனர். இவை பெரும்பாலும் ஆழ் கடலில் வசிப்பவை.

விசைப்படகுகள் மற்றும் பெரிய கப்பல்களில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது கடலில் வீசி எறியப்படும், பிளாஸ்டிக் வலைகளை சாப்பிட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் உடல் கூற்று ஆய்வில் முடிவில் குறித்த டொல்பின் மீனின் இறப்பு குறித்து தெரிய வரும்.

மேலும் இது குறித்து மண்டபம் வனத்துறை அதிகாரி சதீஸ் கூறுகையில்,

கரை ஒதுங்கிய டொல்பின் கூன் முதுகு ஓன்கி என்ற இனத்தை சேர்ந்த பெண் டொல்பின். சுமார் 50 கிலோ எடையும் 5 அடி நீளம் கொன்ட சுமார் 9 வயதுடையது.

அரியவகை இனத்தை சேர்ந்த இந்த டொல்பின் மீனின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

மேலும் இது போன்ற அரிய வகை உயிரினங்களை வேட்டையாடினால் மூன்று வருடங்க முதல் ஏழு வருடங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்தார்.