சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட பேருந்து நடத்துடனர்! நீதவான் கொடுத்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதின்மூன்று வயதுடைய சிறுமியொருவரிடம் தவறாக நடந்துகொண்ட பேருந்து நடத்துனரை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்.

தாஹா நகர், மூதூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மூதூருக்கும், இலங்கை முகத்துவாரம் பகுதிக்கு செல்லும் தனியார் பேருந்து நடத்துனராக செயற்படுகின்றார்.

இந்த நிலையிலே பேருந்தில் பயணித்த சிறுமியிடம் நடந்துகொண்டதாக, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டு, இன்று மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இன் போதே நீதவான் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.