வாகன சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான கணினிமய சோதனை நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான கணினிமய சோதனைகளுக்கான பணிகள் யாவும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இதற்காக வேரஹரவில் 143 கணினிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கணினிமய வாகன சாரதி சோதனை நிகழ்வை அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இந்த கணினிமய சோதனை சமாந்தரமாக எட்டு மாவட்ட செயலகங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
2020ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் இந்த கணினி மய வாகன சாரதி அனுமதிப்பத்திர சோதனை முறை நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனையின்படி கணினிகள் பரீட்சார்த்திகளிடம் உடனடியான கேள்விகளை தொடுக்கும்.
அத்துடன் பெருந்தெருக்களின் குறிக்காட்டிகள் தொடர்பிலும் அது கேள்விகளை தொடுக்கும், அதேநேரம் பரீட்சையின் முடிவும் உடனடியாகவே கிடைக்கும் என்று போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.