தேசிய குத்து சண்டை போட்டியில் மன்னார் மாவட்டத்திற்கு பெருமை தேடித்தந்த தர்சன்

Report Print Ashik in சமூகம்

மன்னார் - மடு வீதி கட்டடையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் தேசிய ரீதியில் நடை பெற்ற குத்து சண்டை போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

மடு வீதி கட்டடையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் தர்சன் மூன்றாம் இடத்தை பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய ரீதியில் மன்னார் மாவட்டம் முதன் முறையாக குத்து சண்டை போட்டியில் பதக்கம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதிய வளமும் பொருளாதார வசதியுமின்றி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இம் மாணவன் இச் சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன், சர்வதேச ரீதியில் சாதிக்க துடிக்கும் இவர் தனது பயிற்சிகளுக்கு தேவையான உதவிகள் எதுவும் இல்லாதிருப்பதாக கவலை தெரிவிக்கின்றார் .

சாதனையாளர் தர்சன் இன்று கட்டடையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களால் மடு சந்தியிலிருந்து மோட்டார் வாகன தொடரணி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன், பாராட்டு விழாவும் நடைபெற்றுள்ளது.

மேலும், நிகழ்வில் அருட்தந்தையர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் மரிய சீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.