இலங்கையின் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை

Report Print Ajith Ajith in சமூகம்

மரண தண்டனையை அமுல் செய்யப்போவதாக விடுக்கப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் இன்று மரண தண்டனை நிறைவேற்ற அறிவிப்பை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தார்.

இதன்படி ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் சிறையில் உள்ளவர்களே மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என இலங்கையின் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் 40 வருடங்களின் பின்னர் இந்த மரண தண்டனை நிறைவேற்றத்தை அமுல்படுத்தினால் இலங்கையின் கீர்த்திக்கு பாதிப்பு ஏற்படும் என்று மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே அந்த தீர்மானத்தை நிறுத்திவைக்குமாறு மன்னிப்புசபையின் தென்னாசிய உதவிப்பணிப்பாளர் தினுசிக்கா திஸாநாயக்க இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இந்தநிலையில் குற்றங்களுக்கான தண்டனை, மரண தண்டனையாக இருக்கவேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.

மேலும், 1976ஆம் ஆண்டே இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றம் கைவிடப்பட்டது என குறிப்பிடப்படுகின்றது.