யாழ். நல்லூர் கந்தன் கோவிலுக்கு வரக் கிடைத்தமையை பெரும் பாக்கியமாக உணர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ச, யாழ். நல்லூர் கந்தன் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.
தமிழ் கலாசார முறைப்படி ஆலயத்திற்கு சென்றிருந்த அவர், நல்லூர் கந்தன் கோவிலில் வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், “வரலாற்று மற்றும் கட்டடக்கலையின் உச்சக்கட்ட அதிசயமான நல்லூர் கந்தன் ஆலயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து.
இங்கு வருகை தர கிடைத்ததை பெரும் பாக்கியமாக உணர்கின்றேன்” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.