பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரும் விரைவில் விடுதலை?

Report Print Murali Murali in சமூகம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உறுதியாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கடம்பூர் ராஜூ இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இயக்குநர் பா. ரஞ்சித்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் ராகுல் காந்திக்கு ஆட்சேபம் இல்லை என்று கூறியது அவரது குடும்ப முடிவு. இந்நிலையில், ராகுல் காந்தி கூறியதை மத்திய அரசு ஏற்றால் அவர்களை விடுவிக்கலாம்.

எவ்வாறாயினும், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சரின் இந்த கருத்தையடுத்து குறித்த அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்பட்டலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.