வடக்கு மாகாணத்தில் வெற்றியீட்டி தேசிய ரீதியில் செல்கின்ற கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட அணியை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வழியனுப்பி வைத்துள்ளார்.
குறித்த போட்டி வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் மாவட்டங்களுக்கு இடையில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த அணியினர் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் யாழ்ப்பாண அணியை வெற்றிக்கொண்டு தேசிய ரீதியில் விளையாடுவதற்கு தகுதிப் பெற்றனர்.
கிளிநொச்சி மாவட்டத் துடுப்பாட்ட அணியினர் வரலாற்றில் முதல் தடைவையாக கடந்தமுறை மாகாணத்தின் சம்பியனானார்கள்.
இந்த முறையும் சம்பியானானதோடு தொடர்ச்சியாக இரண்டாவது முறையகவும் தேசிய ரீதியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினருடன் கிளிநொச்சி மாவட்ட மென்பந்து, மேசைப்பந்தாட்டம், மெய்வல்லுனர் ஆகியவற்றின் பயிற்றுநர் ச.குமார், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் க.ஜெயக்குமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரியபரந்தன் அமைப்பாளர் சு.யதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.