முகாவில் பகுதியில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் மணல் அகழ்வு

Report Print Arivakam in சமூகம்

பச்சிலைப்பள்ளி - முகாவில் பகுதியில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் மணல் அகழப்படுவதாக அந்த பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பிரதேச செயலகத்தில் இரண்டு லோடுகளுக்கு அனுமதி எடுத்துவிட்டு நூற்றுக்கணக்கான லோடு மணலை ஏற்றி விற்கின்றனர். இதனால் பிரதேச மக்கள் பெரிதும் பாதிப்படைவதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விடயம் குறித்து பிரதேச செயலகத்தினை தொடர்புகொண்டு வினவியபோது,

தனியார் காணிகளுக்குள் மணல் ஏற்றி எங்கு என்றாலும் கொண்டு செல்லலாம் என பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனிக்கவில்லை எனவும் குறித்த உறுப்பினர் குறைபட்டுக்கொண்டுள்ளார்.