பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு! ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் டெனிஸ் பந்தினை தூக்கி எரிந்து ஹெரோயின் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியாக பெயரிடப்பட்ட பெண்ணுக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெனிஸ் பந்திற்குள் நுட்பமான முறையில் 3.15 கிராம் ஹெரோயின் வைத்து குறித்தபெண் இந்த செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் ஹிருனி எல்விஸ் என்ற பெண் இந்த குற்றத்தை செய்துள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குற்றச்சாட்டு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டமையினால் நேற்று இந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.