மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவிக்கும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Report Print Kamel Kamel in சமூகம்

மரண தண்டனை விதிப்பதில் பிழையில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்...

சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள், சிறையில் இருந்து கொண்டே குற்றச் செயல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதில் தவறில்லை.

உயிரை எமக்கு வழங்க முடியாது, எடுக்கவும் முடியாது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றவாளிகள் சிறையிலிருந்து கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.

சமூகத்தை கட்டியெழுப்ப முடியவில்லை, போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.

சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சிலர், குற்றச் செயல்களை நினைத்து மன வேதனை அடைகின்றார்கள்.

அவ்வாறானவர்கள் தொடர்பில் நியாயமான கரிசனை காட்டுவதில் தவறில்லை.

எனினும், பாரிய குற்றச் செயல்களை இழைத்தவர்கள் தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை அனுமதிக்க முடியாது.

போதைப் பொருள் குற்றச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் சிறையில் இருந்து கொண்டே தொடர்புடையவாகளை தூக்கிட்டு கொல்வது தவறில்லை என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...