பொலிஸ் உத்தியோகத்தரை கொடூரமாக கொலை செய்த பிக்குவிற்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Shalini in சமூகம்

இரத்தினபுரியில் பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்ய பௌத்த பிக்குவிற்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பிக்குவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதவான் சாலிய சந்தன அபேரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செவ்வாயக்கிழமை இரத்தினபுரி - கல்லெந்த விகாரையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பிக்கு ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை குறித்த பிக்கு கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மேலும், குறித்த பிக்கு கைக்குண்டொன்றை எடுத்து வந்துள்ள நிலையில் அவரின் கைக்கு தாக்குதல் மேற்கொண்டு அவரை கைது செய்த நிலையில் இவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...