பொலிஸ் குழுவை கண்டதும் தலைதெறிக்க ஓடிய நபர்! விசாரணைகள் தீவிரம்

Report Print Shalini in சமூகம்

திருகோணமலை - மட்கோ பகுதியில் பொலிஸாரைக் கண்டதும் தன்கையில் இருந்த கேரள கஞ்சா பொதியை வீசி விட்டு ஒருவர் தலைதெறிக்க ஓடியுள்ளார்.

இதன்போது குறித்த பொதியை பொலிஸார் சோதனையிட்ட போது அதிலிருந்து சுமார் ஒரு கிலோ 152 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்கோ பகுதிக்கு வேறு வேலை நிமித்தம் திடீர் சோதனைக்காக சென்ற போது வீதியின் அருகே பொதி ஒன்றை வைத்திருந்த நபரொருவர் எமது பொலிஸ் குழுவை கண்டவுடன் பொதியை வீசி விட்டு தப்பியோடினார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நபர் இதற்கு முன்னரும் கேரள கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவருகிறது.

குறித்த கேரள கஞ்சாவை திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தப்பியோடிய நபரான ஆண்டாங்குளம், திருகோணமலை எனும் முகவரியை சேர்ந்த 40 வயதுடைய விக்ரமகே சந்தன குலதுங்க என்பவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

செய்திகள் - ஹஸ்பர் ஏ ஹலீம்