அரசாங்க வனப் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட தேக்கு மரக்குற்றிகள்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு – பெரிய புல்லுமலை அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக் குற்றிகளை இன்று கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகள் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பர் ரக வாகனம் மற்றும் சாரதியை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக கரயடினாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தெரிவித்துள்ளார்.

பெரிய புல்லுமலை அரச வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டபட்ட மரக்குற்றிகள் ஏறாவூரிலுள்ள மர ஆலைக்கு கொண்டு செல்லும் வழியில் கைப்பற்றப்பட்டன.

இதேவெளை, வாகனத்தில் 13 தேக்கு மரக் குற்றிகள் காணப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.