காரில் இருந்த காதல் ஜோடிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சி

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் காதல் ஜோடியிடம் தவறாக நடந்துகொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளதாக நாராஹேன்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்றுக்குள் இருந்த காதல் ஜோடியை அச்சுறுத்தி 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தமை மற்றும் காருக்குள் இருந்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தமை சம்பந்தமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் ஆண் ஊழியரும் பெண் ஊழியரும் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.