இலங்கையில் முதல் முறையாக நடந்த அபூர்வ முறை சத்திரசிகிச்சை

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரிஸ்னி சதாப்பினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொண்டை குழாய்க்கு அருகில் நூதமான முறையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொண்டை குழாய்க்கு அருகில் வழக்கத்திற்கு மாறான ஏற்பட்ட இரத்த நாளங்களின் வளர்ச்சி நோயினால், பேச முடியாமல், மூச்சு விட முடியாமல் தவித்த இளைஞனுக்கு இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞருக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனால் மூச்சுவிட முடியாமையினால் கழுத்து பகுதியில் குழாய் ஒன்று பொருத்தி மூச்சுவிடுவதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட நிலையில் 4 வருடங்களாக அவர் இந்த நோயில் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.

இந்நிலையில் கொபிலேஷன் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வெற்றியளித்துள்ளது.

இவ்வாறான முறையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திர சிகிச்சை இதுவாகும்.