திருகோணமலை, கந்தளாய் பகுதியில் பொலிஸாரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 'போதைப்பொருளற்ற நாடு" என்ற வாசகங்கள் பொறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கந்தளாய் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் கந்தளாய், பேராறு நகரில் அனைத்து பொது மக்களையும் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கந்தளாய் பகுதியிலுள்ள பாடசாலை மதில்கள் மற்றும் சந்திகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக கந்தளாய் பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே போதை பாவனை அதிகரித்து வருவதையடுத்து, பெற்றோர்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்களை விழிப்படைய செய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் இதனால் இந்த சுவரொட்டி நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் கந்தளாய் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Latest Offers