பொலிஸ் அறிக்கையின் அடிப்படையில் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

Report Print Steephen Steephen in சமூகம்

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், மீண்டும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர் என்று பொலிஸ் அறிக்கையை ஆதாரமாக வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை அங்கீகரிக்க முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமாக குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், தொடர்ந்தும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது பிரச்சினைக்குரிய நிலைமை.

மரண தண்டனை விதிக்கப்பட்டு விசேட இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றால், அது சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்.

சிறைச்சாலை ஆணையாளர் இது குறித்து பதிலளிக்க வேண்டும். அத்துடன் பொலிஸ் அறிக்கையின் அடிப்படையில் மரண தண்டனையை நிறைவேற்றினால், எதிர்காலத்தில் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் யூ.ஆர்.டி. சில்வா குறிப்பிட்டுள்ளார்.