தாய்லாந்து பிரதமர் இலங்கையில்

Report Print Steephen Steephen in சமூகம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் பிரயத் சான் ஓ சா உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று இலங்கை வந்துள்ளனர்.

இந்த குழுவினர் தாய்லாந்து விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இன்று பிற்பகல் 2.45 அளவில் கட்டுநாயக்க சர்தேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தாய்லாந்து பிரதமர் மற்றும் அவரது பாரியாருடன் 40 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

தாய்லாந்து பிரதமரை வரவேற்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் சரத் பொன்சேகா, வஜிர அபேவர்தன, பைஸர் முஸ்தபா உட்பட அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

தாய்லாந்து தூதுக்குழுவினர் இலங்கை்கான விஜயத்தை முடிந்துக்கொண்டு நாளைய தினம் நாடு திரும்ப உள்ளனர்.