மரத்துடன் மோதிய சிறிய ரக லொறி: இருவர் வைத்தியசாலையில்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் பசுமலை பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று பாதையை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று மாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் அதில் பயணம் செய்த இருவர் காயங்களுக்குள்ளாகி அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பகுதியிலிருந்து டயகம பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதிக்கு வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...