சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மஹாசோன பலக்காய தலைவர்

Report Print Steephen Steephen in சமூகம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மஹாசோன் பலக்காய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வித குற்றச்சாட்டும் இன்றி சிறையில் அடைத்துள்ள தன்னை விடுவிக்குமாறு கோரி அவர் நேற்று மதியம் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கண்டி திகன பகுதியில் கடந்த மார்ச் 5 ஆம் திகதி நடைபெற்ற இனவாத வன்முறைகளை அடுத்து கைதுசெய்யப்பட்ட மஹாசோன் பலக்காய அமைப்பின் தலைவர் மார்ச் 10 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திகனயில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தாக்குதலுக்கு முன்னர் முகநூலில் நேரடி காணொளி மூலம் உரையாடிய அமித் வீரசிங்க, சிங்கள இளைஞர்களை களத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்ததுடன் தாக்குதல் சம்பவங்களிலும் பங்கேற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ள

Latest Offers

loading...