மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி உப அலுவலகம் இடமாற்றம்

Report Print Yathu in சமூகம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி உப அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இவ்வலுவலகம் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் உப அலுவலகமாக இதுவரை கிளிநொச்சி பழைய வைத்தியசாலையில் இயங்கி வந்தது.

கிளிநொச்சி மாவட்ட மக்களின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்காக குறித்த உப அலுவலகம் குறித்த பகுதியில் இயங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த 11.07.2018 முதல் குறித்த உப அலுவலகம் கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்தில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வியாழக்கிழமை தவிர்ந்த ஏனைய அலுவலக நாட்களில் குறித்த அலுவலகத்தில் மக்கள் தமது மனித உரிமை தொடர்பான விடயங்களுக்கான சேவைகளையும், முறைப்பாடுகளையும் பெற்றுக்கொள்ளவும் முடியும் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...