சென்னைக்கு கடத்தப்பட்ட 5 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் பறிமுதல்

Report Print Ashik in சமூகம்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக கடத்தப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடியை சேர்ந்த இந்திய மத்திய வருவாய் புலானாய்வு பிரிவினர் நடத்திய தீவிர சோதனையில் - புதுக்கோட்டை பூதக்குடி சுங்கச்சாவடி அருகே சென்ற தனியார் பேருந்தில் இருந்து இன்று 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட போது புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த இருவர் கடத்தி வந்த 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான 17.83 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதில் 16 கிலோ சுத்த தங்கமும், 1.83 கிலோ உலோக கலப்படமுள்ள (சாதாரண) தங்கத்தையும் பறிமுதல் செய்யப்பட்டாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக சென்னை மண்ணடியை சேர்ந்த ஒருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Latest Offers

loading...