கொழும்பில் இருந்து சென்ற ரயில் மோதுண்டு பெண்ணொருவர் பலி

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் மோதுண்டு இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபம் வீதியின் பண்டிருப்பு தேவாலயம் மற்றும் லுனுவில ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டிருப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் வாழும் அம்பரா முத்துசாமி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 4 மணியளவில் சிலாபம் நோக்கி பரீட்சை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ரயிலில் மோதுண்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த பெண் ரயில் வருவதனை அவதானிக்காமல் ரயில் வீதியை கடக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.