பச்சைபுல்மோட்டைப் பாலம் திறந்து வைப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, பொக்கணைப் பகுதியில் அமையப்பெற்றுள்ள பச்சைபுல்மோட்டை வீதிப் பாலம் மக்கள் பாவனைக்காக இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் கிராமியப் பாலங்கள் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது பச்சைபுல்மோட்டை பாதையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்து படுகொலை செய்யபப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அம்பலவன் பொக்கணை சனசமூக நிலைய தலைவர் ச.தட்சணாமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற பாலம் திறப்பு விழா நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதிப்பணிப்பாளர் சிவனேசன், கரைதுரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.