புலிகளை அழித்த நாம் குற்றவாளிகளுடன் போராடுகிறோம்: பொலிஸ்மா அதிபர்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

தமிழீழ விடுதலை புலிகளை அழித்து இலங்கையில் சமாதானத்தை உருவாக்கிய நாம் இன்று குற்றவாளிகளுடனும், குற்றச் செயல்களுடனும் போராடுகிறோம். அதனையும் அழித்து வெற்றி பெறுவோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங் கு நிலை குறித்து ஆராய்வதற்க இன்று யாழ். வந்த பொலிஸ்மா அதிபர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்து இதன்போது அவர் கூறுகையில்,

சட்ட ரீதியற்ற யாருடைய கருத்திற்கும் நான் பதிலளிக்க வேண்டியதில்லை. அதனை நான் நிராகரிக்கின்றேன்.

குற்றச் செயல்கள், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் எங்களால் முடிந்தவரை குற்றங்களை தடுக்கவும், அதில் ஈடுபடுகின்றவர்களை கண்டுபிடிக்கவும், குற்றங்கள் இடம்பெறுவதற்கான காரணத்தை கண்டறியவும் நாம் முயற்சி செய்வோம்.

வடக்கில் தற்போது 6 ஆயிரத்து 500 பொலிஸார் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் நாம் ஒன்றிணைக்க வேண்டும். குற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் நாம் தனியே செய்ய முடியாது.

இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் பொது மக்களது ஒத்துழைப்பு தேவை. சிவில் பாதுகாப்பு குழுக்களின் பங்களிப்பு தேவை. அவர்களை சந்தித்து கலந்துரையாட வேண்டும்.

அவர்களும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொலிஸ் நிலையத்திற்கு வருகின்ற பொது மக்களுடன் பொலிஸார் கலந்துரையாட வேண்டும். போதைப் பொருள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்படும் போது அவர்களிடம் அது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

இவற்றை நாங்கள் ஓர் குழுவாக இணைந்து செயற்பட வேண்டும். நாங்கள் பிரிக்கப்படுவோமாக இருந்தால் நாம் இயலாதவராக போய்விடுவோம். குற்றச் சம்பவங்கள் தொடர்பில் நான் பொலிஸ்மா என்ற ரீதியில் செயற்படுகின்றேன்.

பொது மக்களுக்கு என்ன விதமான பிரச்சினைகள் காணப்பட்டாலும் அதனை பொலிஸ் அதிகாரிகளூடாக தீர்த்துக்கொள்ள முடியும்.

இந் நாட்டில் மக்களிடையே இனரீதியாகவும் மத ரீதியாகவும் வேற்றுமைகள் காணப்படுகின்ற போதும் அவர்கள் நிம்மதியாகவும், சமத்துவத்துடனும் வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் விடுதலைப் புலிகளை அழித்து வெற்றியீட்டியமையாகும்.

ஆனால் தற்போது நாம் குற்றச் செயல்களுடன் போராடுகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...