திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் ஒன்று விபத்து

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளைமணல் சந்திக்கு முன்னால் உள்ள மைதானத்தருகில் வைத்து விபத்து நேர்ந்துள்ளது.

திருகோணமலை நீதிமன்றத்தில் இருந்து தனது கடமைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய சட்டத்தரணி ஒருவரின் கார் வெள்ளைமணல் சந்திக்கு முன்னால் விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தின்போது வாகனம் செலுத்திய சட்டத்தரணிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரிய கிண்ணியா 6ம் வட்டாரத்தை சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் காரே விபத்தில் சிக்கியுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers

loading...