வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ். வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இயத்திரம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் ரூபா ஒரு இலட்சத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கொள்வனவு செய்து வேலணை பிரதேசசபை உறுப்பினர்களான செ. பார்த்தீபன், சி. அசோக்குமார் ஆகியோர்களூடாக வழங்கி வைத்துள்ளார்.

மேலும், நிகழ்வில் தீவக வலய கல்விப் பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் ஜெயரூபன் மற்றும் பாடசாலை அதிபர் புஸ்பநேசா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.