மஹிந்த குடும்பத்திற்கு நிதியளித்தமையை ஏற்றுக்கொண்டுள்ள சீனா நிறுவனம்

Report Print Ajith Ajith in சமூகம்

மஹிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பாவினால் நடத்திச் செல்லப்படும் அமைப்பு ஒன்றுக்கு நிதியளித்தமையை சீன நிறுவனமொன்று ஏற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு சர்வதேச கென்டைய்னர் டேமினல் லிமிடெட் என்ற இந்த நிறுவனமே குறித்த செய்தியை ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சீன நிறுவனம் நிதியளித்ததாக நிவ்யோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது. எனினும் அதனை மஹிந்தவின் தரப்பு மறுத்து வந்தது.

இந்தநிலையில் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்ச நடத்திச் செல்லும் நிறுவனம் ஒன்றுக்கு 20 மில்லியன் ரூபாயை அன்பளிப்பாக வழங்கியமையை சீன நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

வறுமையில் உள்ளவர்களுக்கான வீடமைப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது என்ற அடிப்படையிலேயே இந்த நிதி வழங்கப்பட்ட போதும், அந்த வீடுகள் தொடர்பில் தமது நிறுவனத்தினால் மேற்பார்வை செய்யப்படவில்லை என அந்த சீன நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அன்பளிப்பு தொடர்பில் முன்னதாக சீன நிறுவனம் தகவல்கள் வழங்கியிருக்கவில்லை. எனினும் சீன நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய்க்கான காசோலையின் பிரதி ஒன்றை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டமையை தொடர்ந்தே சீன நிறுவனம் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது.

Latest Offers