நிர்வாணமாக பரபரப்பை ஏற்படுத்திய நபர்

Report Print Vethu Vethu in சமூகம்

மொனராகல, கல்கமுவ இரகசியமாக வீட்டிற்குள் நுழைந்து நிர்வாணமாக படுத்திருந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கமுவ நீதவான் பிரபாத் ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரான பெண் தனது பிள்ளைகளுடன் விகாரைக்கு சென்று அதிகாலை 1.30 மணியளவில் வீடு திரும்பும் போது, குறித்த நபர் வீட்டில் நிர்வாணமாக படுத்திருந்துள்ளார்.

எனினும் அவர் குடிபோதையில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை பார்த்து பிள்ளைகள் அச்சமடைந்துள்ளதாக முறைப்பாட்டாளரான பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.