90 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் வைத்து சுமார் 90 இலட்சம் பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தமக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் செய்த பொழுது இரண்டு வலம்புரிச் சங்குடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தர்மபுரம் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வலம்புரிசங்கை கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

Latest Offers