வீட்டில் உறவினர்கள் இருந்த போதே 18 வயதான யுவதி எடுத்த தவறான முடிவு

Report Print Steephen Steephen in சமூகம்

மொனராகலை - வெல்லவாய பிரதேசத்தின் எல்ல பகுதியில் வசித்து வந்த 18 வயதான யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யுவதி இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்தார். காதல் விவகாரம் யுவதியின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த யுவதி கடுமையான மனநிலை பாதிப்பில் இருந்ததுடன் நேற்றிரவு வீட்டிற்குள் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் நடந்தபோது வீட்டில் யுவதியின் தந்தை உட்பட உறவினர்கள் இருந்துள்ளனர்.

யுவதி, தூக்கிட்டுக் கொண்டதை கண்ட உறவினர்கள், உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் யுவதி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இஷாரா நவோதினி என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக யுவதியின் உடல் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.