மேலதிக வகுப்பிற்காக சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி! பெற்றோரின் உருக்கமான கோரிக்கை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் விபத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டிருகின்ற மாணவனின் சிகிச்சைக்கு உதவுமாறு அவரது பெற்றோர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

முழங்காவில் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி மேலதிக வகுப்புக்காக சென்ற 16 வயதான திருச்செல்வம் கஜேந்திரன் என்ற மாணவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று தற்போது பெற்றோரின் பராமரிப்பில் வீட்டில் இருந்து வருகின்றார்.

இவருக்கான மேலதிக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் அதற்கான நிதியுதவி இன்மை மற்றும் குடும்ப வறுமை காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து பெற்றோர் உதவி கோரியுள்ளனர்.