அவுஸ்திரேலிய பெண்ணுடன் சிக்கிய இலங்கை இளைஞர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

பொத்துவில் பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவருடன் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணம வெவ பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய பெண் ஒருவருடன் அருகம்பே பிரதேசத்தில் இருந்து வந்த இந்த இளைஞர் ஏரிக்கு அருகில் கூடாரம் அமைத்து தங்குவதற்கு தயாராகியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞனை தேடி வந்த மற்றுமொரு இளைஞர் அவர்களுடன் இரவு தங்குவதற்கு தீர்மானித்துள்ளார்.

இளைஞர் விரும்பாத போதிலும், பின்னர் ஒருவாறு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மூவரும் இணைந்து கஞ்சா மற்றும் பல்வேறு போதைப்பொருளை பருக ஆரம்பித்துள்ளனர்.

எனினும் அதிகாலை 2 மணியளவில் இடையில் வந்த இளைஞனை, ஆரம்பத்திலேயே வந்த இளைஞன் தாக்கி விரட்டியுள்ளார். விரட்டியடிக்கப்பட்ட இளைஞன் இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார், முறைப்பாடு செய்த இளைஞன் மற்றும் அவுஸ்திரேலிய பெண் உட்பட மூவரையும் கைது செய்துள்ளனர்.