கொழும்பு, வெள்ளவத்தையில் இளைஞரொருவர் கைது

Report Print Sujitha Sri in சமூகம்

கொழும்பு - வெள்ளவத்தை, கலுபோவில பகுதியில் வைத்து இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த குறித்த இளைஞர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரிடமிருந்து ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிழல் கல்கிஸ்சை பகுதியை சேர்ந்த 28 வயதான நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரிடமிருந்து 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.