வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவர் செய்த காரியம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - உப்புவெளி பகுதியிலுள்ள வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து கேஸ் சிலிண்டரை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வரோதய நகர் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் வீட்டில் சமையல் அறையில் யாருமில்லாத நேரத்தில் கேஸ் சிலிண்டரை தூக்கிச் செல்லும் போது அயலவர் ஒருவர் கண்டுள்ளார்.

அவர் உடனே கூக்குரலிட்ட நிலையில் அப்பகுதி மக்கள் சேர்ந்து சந்தேகநபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு, அவருக்கு எதிரான திருட்டு வழக்குகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.