மட்டக்களப்பில் போரின் வடுக்களைப் புரிய வைக்கும் காண்பியக்கலை

Report Print Navoj in சமூகம்
41Shares

போரின் வடுக்களைப் பொது வெளியில் புரிய வைக்கும் காண்பியக்கலை கண்காட்சி இன்று மட்டக்களப்பு பன்குடாவெளியில் நடைபெற்றது.

பன்குடாவெளியில் ஆளரவமற்றும் சிதிலமடைந்தும், வெளவால்களின் இருப்பிடமாகவும், பட்டிகள் களைப்பாறும் இடமாகவும் அமைந்திருக்கும் கண்ணாடிப்போடியார் இல்லத்தில் ஓவியர் சுசிமன் நிர்மலவாசனது காண்பியக் காட்சிபடுத்தல்கள் நிகழ்த்தப்பட்டன.

கடந்த கால போர்ச் சூழலின் போது நடைபெற்ற சம்பவங்களை மையமாக்க கொண்டு ஓவியர் சுசிமன் நிர்மலவாசனது அனுபவங்களின் அடிப்படையில் காட்சிப்படுத்தல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.