தனது குழந்தைக்கு தந்தை செய்த காரியம்: குவியும் எதிர்ப்புக்கள்

Report Print Manju in சமூகம்

அப்பாவின் பாசம் மிகவும் சக்தி வாய்ந்தது. குழந்தைகளின் நன்மைக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த பெரும்பாலான அப்பாக்கள் இந்த உலகில் உள்ளனர். அவர்கள் மிகவும் போற்றப்படத்தக்கவர்கள். ஆனால் விதிவிலக்காக இவ்வுலகில் சில தந்தைமாரும் உள்ளனர்.

இலங்கையில் சிங்கள பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் பார்ப்பவர்கள் மத்தியில் ஆத்திரத்தையும் கோபத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது.

தந்தையொருவர் தனது நண்பர்களுடன் பியர் அருந்தும் போது தனது சிறு குழந்தைக்கும் அருந்தக் கொடுத்துள்ளார்.

இவ்வாறான தகுதியற்றவர்களின் செய்தி சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது.

இந்த சிறுவர் துஸ்பிரயோகத்தை செய்த குறித்த நபருக்கும் அவருக்கு ஊக்கம் கொடுத்த அவரின் நண்பர்களுக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

இது இலங்கையில் எப்பாகத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடப்படவில்லை. எனினும் குறித்த நபர்கள் சிங்கள மொழியில் உரையாடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.