சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் தற்கொலை

Report Print Steephen Steephen in சமூகம்

தங்கம் ஆபரணம் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு கம்பளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இளைஞரான இந்த கைதி தான் அணிந்திருந்த சட்டையை பயன்படுத்தி, இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை, தோரகல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் உடமைகளை கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பில் புஸ்ஸலாவை பொலிஸார், இளைஞனை கைதுசெய்திருந்தனர்.

கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இளைஞனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில், கம்பளை சிறைச்சாலையில் இளைஞன் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்த இளைஞன் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என அவரது தந்தை கூறியுள்ளார்.