திருகோணமலையில் புதையல் தோண்டிய ஐவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோன்றிய ஐவரை நேற்றிரவு(14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவரையும், அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மூவருமாக ஐவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் திருகோணமலை ஜமாலியா பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய கருவிகள் மற்றும் இரும்பு வகைகளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.அன்பார் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது பொலிஸாரினால் சிறந்த முறையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாமையினால் நாளை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதான நீதவான் கடமைகளை பொறுப்பேற்றவுடன் குற்றப்பத்திரத்தை சிறந்த முறையில் தாக்கல் செய்யுமாறும் பதில் நீதவான் வலியுறுத்தியுள்ளார்.